வாடகைக்கு மனிதநேயம் என்றில்லாமல்
மனதுக்குள் உலகநேயம் காண்போம் !
சந்திரனில் கால் பதித்த நாம்
சூரியனில் மின்சாரம் எடுப்போம் !
காவிரியை நம்பி இல்லாமல்
கால் பதித்த இடமெல்லாம் நீர் எடுப்போம் !
சிவப்பு விளக்கு மாதர் இல்லாமல்
சிகரம் நிற்கும் மாதர் படைப்போம் !
வன்முறை, அராஜகம், ஊழல் இல்லாத
புதிய உலகத்தின் கதவு திறக்கட்டும் !
பிறக்கத் தயாராகுங்கள் !!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment