Monday, January 19, 2009

ஏன் ரசிக்க மறந்தது ?

காற்றை ரசிக்கும் அந்த மரமும்
நிலவை ரசிக்கும் அந்த வானமும்
அழகை ரசிக்கும் எந்த உயிரும்
எப்படி
என்னவளை ரசிக்க மறந்தது ????

காதல்

வானத்தை காதலித்தால் அது நிலவு !
கடலை காதலித்தால் அது பூமி !
அறிவியலை காதலித்தால் அவன் விஞ்ஞானி !
பெண்ணை காதலித்தால் அவன் ஆண் !
கவிதையை காதலித்தால் அவன் கவிஞன் !
ஆனால்
நான் காதலையே காதலித்தேன் !!!

மனம் விரும்புதே உன்னை

கண்னோடு காண்பதெல்லாம் நீயாக இருக்கும் போது
என் கண்ணுக்குள் நிலவாக நீயாக இருக்கும் போது
என் உயிரில் கலந்தவளாக நீ இருக்கும் போது
மனம் விரும்புதே உன்னை !!!

இதய விலை

உன்னை
அதோடு ஒப்பிடுவதற்கு
இயற்கைக்கு தகுதி இல்லை !

உன்
எண்ணத்திற்கான எல்லையை அடைய
வானம் கூட போதவில்லை !

உன்
இதயத்திற்கு
விலை கொடுக்க
இப்ப்ரபஞ்சத்தில்
எந்த ஒரு
பொருளும் இல்லை !!!

புத்தாண்டு

வாடகைக்கு மனிதநேயம் என்றில்லாமல்
மனதுக்குள் உலகநேயம் காண்போம் !

சந்திரனில் கால் பதித்த நாம்
சூரியனில் மின்சாரம் எடுப்போம் !

காவிரியை நம்பி இல்லாமல்
கால் பதித்த இடமெல்லாம் நீர் எடுப்போம் !

சிவப்பு விளக்கு மாதர் இல்லாமல்
சிகரம் நிற்கும் மாதர் படைப்போம் !

வன்முறை, அராஜகம், ஊழல் இல்லாத
புதிய உலகத்தின் கதவு திறக்கட்டும் !

பிறக்கத் தயாராகுங்கள் !!!!!

ஊக்கம்

பூமி சுற்ற தேவை இயக்கம் !
மனிதன் சுற்ற தேவை ஊக்கம் !!

காதல்

உயிரும் உள்ளமும்
சேர்ந்து மலர்வது தான்
காதல் !!!